Type Here to Get Search Results !

திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் அரூரில் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார்.

திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் அரூரில் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார்.


தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் கடந்த 2011 சட்டசபை பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் பழனியப்பன் போட்டியிட்டு வெற்றி பெற்று உயர் கல்வித் துறை அமைச்சராக பதவியேற்றார். 2016 சட்டசபை பொதுத் தேர்தலில் இன்று அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 


அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இருந்த விலகி அமமுக வில் இணைந்தார். சில காரணங்களால் இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். 2021 இல் நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். சமீபத்தில் சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.


இந்நிலையில்  அரூர் திமுக ஒன்றிய, நகர மற்றும் நிர்வாகிகளை இன்று  மரியாதை நிமித்தமாக சந்தித்து  சால்வை அணிவித்தார்.அரூர் நகர பொறுப்பாளர் மோகனை சந்திக்க சென்ற போது முன்னாள் அமைச்சருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies