Type Here to Get Search Results !

கோயில் உண்டியல் உடைத்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் பணம் மற்றும் நகைகள் கொள்ளை.

ஓசூர் அருகே கோயில் உண்டியல் உடைத்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் கொள்ளை மர்மநபர்கள் கைவரிசை.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணை அருகே உள்ள கெலவரப் பள்ளி கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு எல்லம்மாள் திருக்கோயில் அமைந்துள்ளது இன்று செவ்வாய்க்கிழமை பக்தர்கள் வழக்கம்போல் சாமி தரிசனம் செய்ய வந்த போது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததும் உண்டியல் இல்லாததும் கண்டு திடுக்கிட்டனர், பக்தர்கள் விரைந்து சென்று தேடிப் பார்த்ததில் விவசாய நிலத்தில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்


கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்திய இரண்டு சவரன்  நகைகள் மற்றும் உண்டியல் பணம் ஒரு லட்ச ரூபாய் என ஒரு லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்த கொள்ளையர்கள் விவசாய நிலத்தில் உண்டியலை வீசி சென்றுள்ளனர் இதுகுறித்து கெலவரப்பள்ளி பொதுமக்கள் ஓசூர் ஹாட்கோ காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓசூர் ஹாட் கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உளியாலம் முனியப்பன் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை நடந்தது குறிப்பிடத்தக்கது தொடர்ந்து கோயில்களை குறிவைத்து கொள்ளையடித்து வரும் கும்பலை விரைந்து பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies