அரூரை சேர்ந்த ராணுவ வீரர் மாயவன் இவர் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சத்யா குழந்தைகளுடன் அரூர் ஆசிரியர் நகரில் வசித்து வருகிறார். சத்யாவின் உறவினர் ஒருவர் அம்பேத்கர் நகரில் நேற்று உயிரிழந்தார் இந்த சம்பவத்தில் பங்கேற்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியபோது வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் நகை, 25 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள், ரொக்கம் ரூ. 10000 திருடு போனது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த சத்யா இன்று அரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் கைரேகை நிபுணர்கள் வரவழைத்து கைரேகைகளை பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக