Type Here to Get Search Results !

போலி கால்நடை மருத்துவர்கள்; மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை.


கால்நடைகளுக்கு "கால்நடை மருத்துவ பேரவை” எனப்படும் வெட்னரி கவுன்சில் பதிவு பெற்ற கால்நடை மருத்தவர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்க அங்கீகாரம் உண்டு எனவும், மீறி போலி மருத்தவர்கள் சிகிச்சை அளிப்பதும், அவர்களிடம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதும் தவறான செயல். போலி கால்நடை மருத்தவர்களிடம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதால் ஏற்படும் குறைபாடு, இழப்பீடுகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்காது. மாவட்டங்களில் சில இடங்களில் சினை ஊசி போடுவதற்கு பயிற்சி பெற்ற செயற்கைமுறை கருவூட்டல் பணியாளர்கள் உள்ளனர். 

அவர்களில் சிலர் போலியாக கால்நடை மருத்துவர் எனக் கூறி மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். இது முற்றிலும் தவறு. செயற்கைமுறை கருவூட்டல் பணியாளர்கள் மாடுகளுக்கு சினை ஊசி போடுவதற்கு மட்டும் மூன்று மாத காலம் பயிற்சி பெறுகின்றனர். அவர்களுக்கு கால்நடைகளுக்கு வரும் நோய்கள்.சிகிச்சை முறைகள் மற்றும் வழங்கப்பட வேண்டிய மருந்துகள் குறித்த பயிற்சி எதுவும் கிடையாது என்பதால் அவர்கள் கருவூட்டல பணி மட்டுமே செய்ய தகுதியுள்ளவர்கள். 

எனவே, கால்நடைகளுக்கான சிகிச்சை அங்கீகரிக்கப்பட்ட (பதிவு பெற்ற) மருத்தவர்களை மட்டுமே மக்கள் அணுக வேண்டும். போலி கால்நடை மருத்தவர்கள் குறித்த தகவல்கள் அந்தந்த மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநருக்கு / அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். போலி கால்நடை மருத்துவர்கள் கண்டறியப்பட்டால் முதல் முறை ரூபாய் 1000, இரண்டாவது முறை ருபாய் 1000 அபராதம் அல்லது 6 மாத கடுங்காவல் சிறை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies