Type Here to Get Search Results !

தடுப்பூசிக்காக காத்திருந்த மக்கள் ஏமாற்றம்.


முறையான  தகவல்  இல்லாமல் அரூர் நகரில் கோரோனா தடுப்பூசி செலுத்து கொள்ள  காத்திருந்த பொதுமக்கள்.

கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் அரசு அரசு மூலம் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. பொது மக்கள் ஆர்வத்துடன் தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர். ஒருபுறம் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இந்நிலையில் தருமபுரி மாவட்டம், அரூர் அரசு மருத்துமனையில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வந்தது. மருத்துவமனைக்கு நோயாளிகளும் மற்றும் தடுப்பு செலுத்திக் கொள்ள பொதுமக்கள் அதிகம் கூடினர்.


கூட்டத்தை கட்டுப்படுத்த  கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்பவர்கள் மட்டும் அரசு மருத்துவமனை எதிரில் எஸ்கேஎஸ் நர்சிங் கல்லூரியில் கடந்த சில நாட்களாக ஊசி செலுத்தும் பனி நடைபெற்று வருகிறது. இன்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள காலை 7 மணி முதல் முதியவர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் மதியம் 12 மணி வரை காத்திருந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு  கேட்டதற்கு தருமபுரியில்  தடுப்பூசி வந்து கொண்டுள்ளது என்ற பதிலையே தொடர்ந்து கூறி வந்தனர்.


முதியவர் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவம் நடந்துள்ளது. தடுப்பூசி செலுத்தும் இடங்களையும் மற்றும் எந்த வகையான தடுப்பூசி கையிருப்பு உள்ளது என்பதை தடுப்பு ஊசி செலுத்தும் மையத்தில் ஒரு அறிவிப்பு பலகையில் எழுதி வைப்பதில்லை இதுகுறித்து நாளிதழ்களில் செய்தி வெளியிடுவதும்  இல்லை. இதனால் தினந்தோறும்  வெகுநேரம் தடுப்புச் வரும் என காத்திருந்து பொதுமக்கள் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. முறையான அறிவிப்பை வெளியிட்டு தடுப்பூசி செலுத்த வேண்டும் என பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies