எதிர் கால தகவல் தொழிற்நுட்ப தேவையினை கருத்தில் கொண்டு மேம்பட்ட தகவல் தொழிற்நுட்பங்களை தமிழக அரசு கையாண்டு வருவதாக அமைச்சர் தகவல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 23 ஜூலை, 2021

எதிர் கால தகவல் தொழிற்நுட்ப தேவையினை கருத்தில் கொண்டு மேம்பட்ட தகவல் தொழிற்நுட்பங்களை தமிழக அரசு கையாண்டு வருவதாக அமைச்சர் தகவல்.

தமிழகத்தின் எதிர் கால தகவல் தொழிற்நுட்ப தேவையினை கருத்தில் கொண்டு மேம்பட்ட தகவல் தொழிற்நுட்பங்களை தமிழக அரசு கையாண்டு வருவதாக மாநில தகவல் தொழிற்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, ஓசூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் மக்கள் கணினி மையங்களை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இணைய வழியாக வருவாய் துறையின் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த மூன்று பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் ஓசூரில் நடைபெற்று வரும் தொழில் பூங்கா பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தின் எதிர்கால தொழிற்நுட்ப தேவையினை கருத்தில் கொண்டு பல்வேறு மேம்பட்ட தொழிற்நுட்ப பணிகள் இந்த துறையில் நடைபெற்று வருகிறது. 
ஆண்டுத் தோறும் இந்த துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. தமிழர்களின் வரலாற்றை உலகளவில் இணைய வழியில் அறிந்து கொள்ள புராண வரலாற்றை இணைய வழியில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. 
இணைய வழி கல்விக்கு தடையற்ற சேவைகள் வழங்க பட்டு வருகிறது. புதிய தொழிற்நுட்ப தேவையினை கருத்தில் கொண்டு இந்த துறை சிறப்பாக பணியாற்றி வருகிறது. தகவல் தொழில்நுட்ப துறையில் GST மூலமாக ஏற்படும் பாதிப்புகளை குறித்து மத்திய அரசுக்கு தொடர்ந்து தெரிவித்து வருகிறோம்.  பாதிப்புகளை சரி செய்வது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். கோவை, சேலம் பகுதியில் இரண்டாம் கட்ட தொழிற் பூங்கா பணிகளும் ஓசூரில் மூன்றாம் கட்ட பணிகளும் நடைபெறுகிறது. 
ஓசூரில் விரைவில் பணிகள் முடிந்து நடைமுறைக்கு கொண்டு வரப்படும். மாநிலம் முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் மேம்பட்ட இணைய சேவைகள், வழங்க வேண்டும் என்ற நோக்கில் ஆய்வு பணிகளை செய்து வருகிறோம். அனைத்து குறைகளும் கண்டறிய பட்டு தடையற்ற இணைய சேவைகள் வழங்க படும். மக்கள் கணினி மையங்கள் கிராமங்கள் தோறும் அனைத்து துறைகளின் சான்றிதழ்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க படும் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad