நல்லம்பள்ளி ஒன்றியத்தில் 50,000 நபா்கள் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டதாக தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் பேச்சு.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேங்காமரத்துபட்டி கிராமத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தார். இம்முகாமில் 300 பேர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேஸ்வரன் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் உட்பட பகுதிகளில் இதுவரை 50 ஆயிரம் நபர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாள்தோறும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் முதலாவது மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கிராமங்களை நோக்கி மருத்துவ அலுவலர்கள் குழுவுடன் சென்று முகாம் நடத்தி தடுப்பூசி போட்டு வருகின்றனர். இதனால் கிராமப் பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என கேட்டுக் கொண்டார்
