தருமபுரி மாவட்டம், அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரூர் ரவுண்டானா அருகில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் அமைந்துள்ளது. இதில் திங்கள் கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.
இன்று 325 பருத்தி விவசாயிகள், 3200 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இதில், எம்.சி.யு., 5 பருத்தி ரகம் குவிண்டால், ரூ. 6,669 முதல்,ரூ 7,529 வரை விற்பனையானது. மொத்தம் 3,200 பருத்தி மூட்டைகள், ரூ. 65 லட்சத்திற்கு விற்பனையானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக