Type Here to Get Search Results !

ரூ. 20 க்கு பிரியாணி அலைமோதிய கூட்டம்; காற்றில் பறந்த கொரோனா விதிமுறை.


அரூர் அருகே கொளகம்பட்டி பிரிவு சாலையில் புதிதாக பிரியாணி ஹோட்டல் துவங்கப்பட்டது. துவக்க நாளில் ஒரு பிரியாணி 20 ரூபாய் என்றும் பார்சல் கிடையாது என விளம்பரம் செய்யப்பட்டது. தகவலறிந்த அப்பகுதி கிராம பொதுமக்கள் புதிதாக திறக்கப்பட்ட மாட்டுக்கறி பிரியாணி ஹோட்டல்  முன்பு பிரியாணி பிரியர்கள் கூடினார். முன்னதாக 20 ரூபாய் கொடுத்து டோக்கன் பெற்றுக் கொண்டனர்.

பின்னர் டோக்கன் வாங்கிய நபர்கள் நீண்ட வரிசையில் நின்று பாக்கு தட்டு மூலம் பிரியாணியை பெற்றுச் சென்றனர். சிலர் முன்கூட்டியே வீட்டிலிருந்து எடுத்து வந்த பாத்திரத்தில்  வாங்கிய பிரியாணிகளை  அதில் நிரப்பி எடுத்துச் சென்றனர். பலர் அருகில் உள்ள வனப் பகுதியிலும், சாலையோரங்களில் நின்று சாப்பிட்டு சென்றனர். 20 ரூபாய்க்கு பிரியாணி என்றதும் கொரோனா விதிமுறைகளை மறந்த பிரியாணி பிரியர்கள்  சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல், பலர் முக கவசம் அணியாமல் வந்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies