Type Here to Get Search Results !

திறப்பு நாளிலே மூடப்பட்ட பிரியாணி கடை.

தருமபுரி மாவட்டம் அரூரில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடை ஒன்று 70 ரூபாய்க்கு ஒரு பிரியாணி வாங்கினால், இன்னொரு பிரியாணி ஃப்ரீ என்ற அதிரடி ஆஃபரை வெளியிட்டது. 

ஓட்டல் விளம்பரம் தீயாக பரவ, பிரியாணி வாங்க கடை முன் மக்கள் கூட்டம் குவிந்தது. வாசலில் கயிறுகட்டி ஒருவர் பின் ஒருவராக பார்சலை கொடுக்க தொடங்க, வெளியே இருந்தவர்கள் பிரியாணி வாங்கும் ஆர்வத்தில் முண்டியடித்தனர்.

இடைவெளி விட்டு நில்லுங்கள் என பலமுறை கூறப்பட்டும் யாரும் கேட்காததால், சமூக இடைவெளி கடைப்பிடிக்கவில்லை எனக்கூறி பிரியாணி விற்பனையை அரசு அதிகாரிகள் நிறுத்தினர்.

பிரியாணி ஆர்வத்தில் கொரோனாவை மறந்து பொதுமக்கள் முண்டியடித்ததால், திறப்பு விழா அன்றே பிரியாணி கடை மூடப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies