Type Here to Get Search Results !

பிரசவ வார்டில் ஆண் குழந்தை திருட்டு - எஸ்.பி நேரில் விசாரணை.

தருமபுரி  மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாச்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்மணி  இவரது மனைவி மாலினி வயது 19.  நிறைமாத கர்ப்பிணியான இவர் கடந்த 18ஆம் தேதி தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  பிரசவத்திற்காக சேர்த்தனர். 

மாலினிக்கு நேற்று 19ஆம் தேதி  ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் இன்று காலை எட்டு முப்பது மணி அளவில் மாலினி இயற்கை உபாதை கழிப்பதற்காக கழிவறைக்கு சென்றுள்ளார். உறவினர்கள் இல்லாத நிலை பார்த்து பிறந்த ஆண் குழந்தையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர் .குழந்தை இல்லாததை அலறியடித்த மாலினி மற்றும் பெற்றோர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள காவல்கட்டுபாட்டு அறையில் புகார் தெரிவித்தனர். 

பின் தருமபுரி நகர போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .மேலும் தருமபுரி எஸ்பி கலைச்செல்வன், டிஎஸ்பி அண்ணாதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை திருடுபோனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies