Type Here to Get Search Results !

ஊருக்குள் நுழைந்த புள்ளிமான், கடித்து குதறிய நாய்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே புள்ளிமானை துரத்தி கடித்த நாய்களிடம் இருந்து மானை காப்பாற்றிய இளைஞர்கள் கால்நடை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

ஓசூரில் பிரம்மன் மலை அடிவார பகுதியில் சிறிய காடுகள் மற்றும் குன்றுகளும் உள்ளது மேலும் அப்பகுதியில் விவசாயிகளுக்கு சொந்தமான மாந்தோப்பும் உள்ளது அந்த பகுதிகளில் மான்கள் அதிக அளவில் வசித்து வருகிறது
இந்நிலையில் நேற்று  மலைக் குன்றுகளில் இருந்து வெளியேறிய புள்ளிமானை அப்பகுதியிலிருந்த நாய்கள் துரத்தி கடித்துள்ளது , இதனை அவ்வழியே வந்த இளைஞர்கள் பார்த்து நாய்களை துரத்தி மானை மீட்டு உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர் , அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வனத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது ..
மான் சிகிச்சைக்கு கால்நடை மருத்துவர் மோகன்ராஜ் தலைமையில் அவர்கள் உதவியாளர்கள் ஸ்ரீகாந்த் வேத குமார் ஆகியோர் சிகிச்சை அளித்தனர் பின்னர் விரைந்து வந்த வனத்துறையினர் சிகிச்சை பெற்ற புள்ளி குறித்து விசாரணை நடத்தினர் இரண்டரை வயது புள்ளிமான் எனவும் ஆறுக்கும் மேற்பட்ட நாய்கள் துரத்தி கடித்ததில் படுகாயமடைந்ததாகவும் உரிய நேரத்தில் மீட்டு மானின் உயிரை காப்பாற்றிய இளைஞர்களுக்கு கால்நடை மருத்துவர் மற்றும் வனத்துறையினர் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
மேலும் சிகிச்சை அளிக்கப்பட்ட புள்ளிமானை ஓசூர் வனசரக காப்பாளர் சேகர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு பத்திரமாக காட்டில் விடப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies