Type Here to Get Search Results !

கோவில்களை திறக்க இந்து அமைப்பு ஆர்ப்பாட்டம்.

செய்தியாளர்: M.கனநாயகன்.

இந்து வழிபாட்டு தலங்களை  திறக்க வலியுறுத்தி பாரதிய இந்து பரிவார் இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, இராம்நகரில் பாரதிய 
ஹிந்து பரிவார் இளைஞர் அணியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இளைஞரணியின் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் பிரேம்குமார் தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  செயலாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்
தமிழ்நாடு அரசு ஊரடங்கில் தளர்வுகளை ஏற்ப்படுத்தி வரும்நிலையில், இந்து வழிபாட்டு தலங்களையும் திறந்திட வேண்டும்.

கோவில்களை நம்பி சாலையோர பூக்கடைகள், தேங்காய், பூஜை பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்று பலரும் பிழைப்பு நடத்தி வருவதால் அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டும்,
இந்துக்களின் உணர்வுகளை மதித்தும் வழிபாட்டு தலங்களை திறக்க கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies