Type Here to Get Search Results !

கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு கடனுதவி.

தருமபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவரின் குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் உயிரிழந்திருப்பின் அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார வளர்ச்சிக்கழகம் "SMILE" என்ற கடன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.


இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பிற்படடுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்துக்குள் இருக்கவேண்டும், குடும்ப வருமானம் ஈட்டக்கூடிய னாரின் வயது  18 முதல் 60-க்குள் இருக்க வேண்டும்.


இத்திட்டத்தில் அதிகபட்சமாக திட்டத்தொகை ரூ.5.00 இலட்சம் வரை இருக்கலாம், திட்டத்தொகையில் 80 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.4.00இலட்சம் வரை கடன் வழங்கப்படும், மீதமுள்ள 20சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1.00 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும், ஆண்டுக்கு 6% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும்.


இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவர் கொரோனா வைரசால் உயிரிழந்தற்கான ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ச. திவ்யதர்ஷினி., இ. ஆ. ப, அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies