Type Here to Get Search Results !

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணமான மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பிஜேபி அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஓசூர் ராம்நகர் அண்ணாசிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ சிபிஎம் விசிக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய பிஜேபி அரசுக்கு எதிராகவும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணமான பிரதமர் மோடியின் நிர்வாகத்தை கண்டித்து முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அதற்கு கண்டனங்களை தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.

தற்பொழுது கொரோனா தொற்று காலகட்டத்திலும் ஏராளமானவர்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு அதனை வேடிக்கை பார்ப்பதாக குற்றம் சாட்டிய அவர்கள் அவ்வாறு வாழ்வாதாரம் இழந்து ஒவ்வொருவருக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ 7,500 மத்திய அரசு சார்பில் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி பேசினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies