Type Here to Get Search Results !

தொடர்ந்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் தருமபுரி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்.

தருமபுரி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக கொரானா பேரிடர் காலத்தில் பல்வேறு மக்கள் நலப்பணிகள் செய்து வருகிறார்கள், அதன் ஒரு பகுதியாக இன்று தருமபுரி அண்ணாநகர் கிளை சார்பாக பொதுமக்கள் 250 நபர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இதில் கிளை நிர்வாகி சாதிக்  ‌சனாவுல்லா மற்றும் சுலைமான் ஆகியோர் கலந்துகொண்டு எம்ஜிஆர் நகர் மற்றும் அண்ணாநகர் பகுதியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினார்கள்.

பாலக்கோடு கிளை சார்பாக இன்று கொரானா எனும் கொடிய நோயிலிருந்து காக்க பொதுமக்கள் 300 நபர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இதில்  கிளை செயலாளர் பாசில் மற்றும் யாசிர் நயீம் ஆகியோர் கலந்துகொண்டு கபசுர குடிநீர்    வழங்கினார்கள் பொதுமக்கள் ஆர்வத்தோடு வாங்கி பருகிய தோடு இந்த சேவையை பாராட்டி மகிழ்ந்தார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies