Type Here to Get Search Results !

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கு சுதந்திர தின விழா விருது.


சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறையின் மூலம் 2021-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின்போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கு சுதந்திர தின விழா விருது வழங்கப்படும்.


2021-ஆம் ஆண்டிற்கு சுதந்திர தின விழாவின்போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் வழங்க தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டு 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை செய்யும் சமூக சேவகர் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனங்கள் குறைந்தது 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்த மகளிர் நலனுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து தங்கள் சாதனைகளை விளக்கும் உரிய படிவம் மாவட்ட சமூகநல அலுவலகம், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூடுதல் கட்டிடத்தில் 30.06.2021-க்குள் பெற்று உரிய தகவல்களை அளித்து அதற்க்கான சான்றுகளை சான்றொப்பமிட்டு நகல்கள் உடன் சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ச.  திவ்யதர்ஷினி., இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies