Type Here to Get Search Results !

சிதிலமடைந்த மொன்னையன் கொட்டாய் சாலை சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை .

தருபுரி நகரிலிருந்து பிடமனேரி வழியாக மொன்னையன் கொட்டாய்க்கும் செல்லும் சாலை சிதிலமடைந்து குண்டும்,குழியுமாக இருப்பதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மொன்னையன் கொட்டாய் பகுதியில் ஏராளமான குடியிறுப்புகள் உள்ளன.இங்கு பள்ளி,கல்லூரி செல்லும் மாணவர்கள்,அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள்,கட்டட மேஸ்திரிகள்,பல்வேறு தொழிலுக்கு செல்லும் தினக்கூலிகள்,கூலி தொழிலுக்கு செல்லும் பெண்கள் என நிறைய பேர் இந்த சாலையில் சைக்கிள்,இரண்டு சக்கர வாகனம் மற்றும் நடந்து செல்பவர்கள் என நிறைய பேர் செல்கின்றனர்.ஆனால் இந்த சாலையில்  ஆங்காங்கே குண்டும்,குழியுமாக வாகனங்களை செல்ல முடியாமல் தத்தளிக்கும் நிலையில் தான் உள்ளது.மேலும் இந்த சாலை நான்கு வழி சாலையான சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கும் செல்கிறது.வாகன ஓட்டிகள்,கார்களில் செல்பர்கள் மிகுந்த தள்ளாட்டத்துடன் தான் செல்ல வேண்டி உள்ளது எனறும்,போதிய தெரு விளக்குககளும் இல்லை என  பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே குண்டும்,குழியமான சிதிலமடைந்து காணப்படும் இச்சாலையை சீரமைத்தும்,,தெரு விளக்குகளை பொறுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies