Type Here to Get Search Results !

கடத்தப்பட்ட சிறுவன் கோவையில் மீட்பு: ஒருவர் கைது.

தர்மபுரி:சிறுவனை கடத்தி சென்ற வாலிபரை, போலீசார் கைது செய்து, சிறுவனை மீட்டனர்.தர்மபுரி அடுத்த வெண்ணாம்பட்டியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ராஜசேகர், 32. அவரது மகன் ஹரீஸ், 7. நேற்று முன்தினம் வீட்டில் விளையாடி கொண்டிருந்த ஹரீஸ் திடீர் என மாயமானர். புகார்படி, தர்மபுரி டவுன் போலீசார், அப்பகுதியில் இருந்த 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தனர்.இதில், ராஜசேகருக்கு அறிமுகமான கோவையை சேர்ந்த சரவணக்குமார், 32 சிறுவனை காரில் கடத்தி சென்றது தெரிந்தது. அவரின் மொபைல் எண்ணை டிராக் செய்து, நேற்று காலை கோவையில் சரவணக்குமாரை பிடித்த போலீசார், அவரிடம் இருந்து சிறுவனை மீட்டனர்.விசாரணையில், சரவணக்குமாரும், ராஜசேகரும் சமூக வலைத்தளம் மூலம் பழகினர்.

இதையடுத்து, நான்கு மாதங்களுக்கு முன், தனக்கு பழைய கார் வாங்கி தரும் படி, ராஜசேகரிடம் 80 ஆயிரம் ரூபாய் சரவணகுமார் கொடுத்துள்ளார். ராஜசேகர் கார் வாங்கி தராமல் பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.ஆத்திரம் அடைந்த சரவணக்குமார், பணத்தை ராஜசேகரிடம் இருந்து மிரட்டி வாங்க, சிறுவனை கடத்தி சென்றது தெரிந்தது. போலீசார் சரவணக்குமாரை கைது செய்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies