மகப்பேறு சட்டம் 1961
மகப்பேறு சட்டம் 1961 சொல்வது என்ன? மகளிர் கட்டாயமாக தெரிந்துகொள்ள வேண்டியவை என்னென்ன?
கர்ப்ப காலத்தில் பெண்கள் பணியிலிருந்து நீக்குவதை அல்லது வெளியேற்றப்படுவதை மகப்பேறு சட்டம் தடுக்கிறது. மகப்பேறு காலத்தில் வெளியேற்றப்பட்டாலும் மகப்பேறு கால நன்மைகள் மற்றும் மருத்துவ சலுகைக்களை மகளிர் கோர முடியும்.
Explainer : மகப்பேறு சட்டம் 1961 சொல்வது என்ன? மகளிர் கட்டாயமாக தெரிந்துகொள்ள வேண்டியவை என்னென்ன?
மகப்பேறு கால விடுப்பு
இந்திய மகப்பேறு உதவிச் சட்டம் 1961-இன் படி பணிபுரியும் பெண்களுக்கு 12 வார காலம் ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு அளிக்கப்பட்டு வந்தது. அதனை 2016 ஆம் ஆண்டு திருத்திய மத்திய அரசு மகப்பேறு காலத்தை 26 வாரங்களாக உயர்த்தியது. அதற்குப் பிறகும் உடல்நலப் பாதிப்புகள் ஏதேனும் இருந்தால், மருத்துவரின் சான்றிதழோடு கூடுதலாக 12 வாரங்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த சலுகைகளை அனைத்தும் முதல் 2 குழந்தைகளுக்கு பொருந்தும். மத்திய அரசின் புதிய சட்டத்தின்படி உரிமை தாய் என அழைக்கப்படும் வாடகை தாய், மற்றும் குழந்தைகளை தத்தெடுப்போருக்கும் இந்த சலுகைகள் பொருந்தும்.
கர்ப்ப காலத்தில் வேலைவாய்ப்பிலிருந்து வெளியேற்றப்படுவது தொடர்பான விதிகள் யாவை?
கர்ப்ப காலத்தில் பெண்கள் பணியிலிருந்து நீக்குவதை அல்லது வெளியேற்றப்படுவதை மகப்பேறு சட்டம் தடுக்கிறது. மகப்பேறு காலத்தில் வெளியேற்றப்பட்டாலும் மகப்பேறு கால நன்மைகள் மற்றும் மருத்துவ சலுகைக்களை மகளிர் கோர முடியும். தவறான நடத்தைக்கு நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டால் இத்தகைய சலுகைகளை பெறமுடியாது. மேலும், பிரசவ காலத்துக்கான பண உதவிகளை உரிய சான்றுகள் அளித்து முன்கூட்டியே நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். சான்றுகள் சமர்பிக்கப்பட்டு 48 மணி நேரத்துக்குள் பிரசவகால தொகையை நிறுவனம் வழங்க வேண்டும்.
No comments
Post a Comment