Hollywood Movies

Breaking News

தருமபுரியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்! வள்ளி தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம்!


எஸ்.வி. சாலையில் நடைபெற்ற பழமையான திருக்கோயில் விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு – மகா கும்பாபிஷேகம், சிறப்பு அபிஷேகங்கள், திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்!

தருமபுரி, நவம்பர் 18:

தருமபுரி டவுன் எஸ்.வி. ரோட்டில் அமைந்துள்ள சித்த விருப்ப செட்டியார் குடும்பத்திற்குச் சொந்தமான பழமையான அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கொடியேற்றத்துடன் தொடங்கிய விழா!

கும்பாபிஷேக விழா கடந்த நவம்பர் 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நவம்பர் 14ஆம் தேதி மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், கோ பூஜை ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து முளைப்பாரி மற்றும் தீர்த்தக் குட ஊர்வலங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க நடைபெற்றன.

நவம்பர் 15ஆம் தேதி மகா கணபதி, சோடச உபசார பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றன. தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜை, உபகார பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அன்று மாலை மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்றதுடன், அங்காள பரமேஸ்வரி அம்மன், வள்ளி தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

மங்கள வாத்தியங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம்!

நவம்பர் 16ஆம் தேதி காலை நான்காம் கால யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அருட்சக்தி கலசங்கள் யாகசாலையில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

இதையடுத்து விமான கோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ராஜ அலங்காரம், தச தரிசனம், மகா தீபாராதனை நடைபெற்றதுடன் பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது.

அங்காள பரமேஸ்வரி அம்மன் – சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம்!

அன்றிரவு 7 மணிக்கு அங்காள பரமேஸ்வரி அம்மன் சமேத தாண்டநேஸ்வரர் சுவாமிக்கும், வள்ளி தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் சிறப்பாகச் செய்திருந்தனர். 

கருத்துகள் இல்லை

Copying is disabled on this page!