Type Here to Get Search Results !

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு மதுபானக் கடைகள் மூடல் – ஆட்சியர் உத்தரவு.


தருமபுரி:
 


காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் உள்ளிட்ட அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் குறிப்பிட்ட காலத்திற்கு மூடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.


அதன்படி, 02.10.2026 அன்று காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL-2, FL-3, FL-3A / FL-4A உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள், முன்னாள் படைவீரர் மதுவிற்பனைக் கூடம் ஆகிய அனைத்தும் மூடப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மதுபான விற்பனை நிலையங்கள் அனைத்தும் 01.10.2026 இரவு 10.00 மணி முதல் 03.10.2026 நண்பகல் 12.00 மணி வரை மதுபானங்கள் விற்பனை செய்யாமல் மூடி வைக்கப்படும்.


இந்த உத்தரவை மீறி மதுபான விற்பனையில் ஈடுபடுவோர் அல்லது கள்ளத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., எச்சரித்துள்ளார். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies