Hollywood Movies

Breaking News

தருமபுரி மாவட்டத்தில் நவம்பர் 15-ஆம் தேதி TNPSC தொழில்நுட்பத் தேர்வு – 6 மையங்களில் 1,886 பேர் பங்கேற்பு!


தருமபுரி:
 


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தேர்வு (Combined Technical Services Examination – Diploma / ITI Level), தருமபுரி மாவட்டத்தில் வரும் நவம்பர் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது.


இத்தேர்வு அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ஓஎம்ஆர் (OMR) முறையில் நடைபெறுகிறது. தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 6 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில் மொத்தம் 1,886 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.


தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு உரிய நேரத்திற்கு முன்பாகவே செல்ல வேண்டும். தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட ஹால் டிக்கெட் மற்றும் தேவையான அடையாள அட்டைகளைத் தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும், தேர்வு மையங்களுக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு செல்லக் கூடாது என்றும், தேர்வு தொடர்பான விதிமுறைகளைப் பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


தேர்வு எவ்வித இடையூறும் இன்றி அமைதியாகவும், முறையாகவும் நடைபெறுவதற்குத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. தேர்வர்கள் TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தங்களது ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Copying is disabled on this page!