தருமபுரி – செப்டம்பர் 24:
தருமபுரி அரசு கலைக்கல்லூரியின் உளவியல் துறையில் பயிலும் இளமறிவியல் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கான வரவேற்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கோ. கண்ணன் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, பொறுப்பு முதல்வர் முனைவர் கோ. பிரபாகரன் தலைமையேற்றார். உளவியல் துறைத் தலைவர் முனைவர் போ. ராதிகா உள்ளிட்ட பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் வரலாற்றுத் துறை பேராசிரியர் முனைவர் கா. விஜய தேவன், விலங்கியல் துறைத் தலைவர் முனைவர் கு. பாலமுருகன், உடற்கல்வி இயக்குநர் மற்றும் பொறுப்பு முதல்வர் கோ. பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். உளவியல் துறையைச் சேர்ந்த ஆசிரியர்கள் முனைவர் பா. ராமநாதன், முனைவர் பா. ராமசாமி, விஜி சாதனா, செல்வி அ. கீர்த்தி, முனைவர் ரா. வேலன் பிரியா ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளை வரவேற்கும் வகையில் நடைபெற்ற விழாவில், பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து மாணவர்களின் பங்கேற்புடன் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து விழாவை உற்சாகமாகக் கொண்டாடினர்.
.gif)

