Type Here to Get Search Results !

பாலக்கோடு புதிய வட்டாட்சியராக ஜெகதீசன் பொறுப்பேற்பு! அசோக்குமார் மாவட்ட ஆட்சியர் அலுவலக MCH பிரிவுக்கு பணியிட மாற்றம்!



பாலக்கோடு – செப்டம்பர் 23: 


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியராக பணியாற்றி வந்த அசோக்குமார், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் MCH பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, பாலக்கோடு வட்டாட்சியராக ஜெகதீசன் அவர்களை நியமித்து மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து, பாலக்கோடு புதிய வட்டாட்சியராக ஜெகதீசன் பொறுப்பேற்றுக் கொண்டார்.


இதனைத் தொடர்ந்து, புதிய வட்டாட்சியர் ஜெகதீசனுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதே நிகழ்ச்சியில், பணியிட மாறுதலாகி செல்லும் வட்டாட்சியர் அசோக்குமாருக்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.


நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் வருவாய்த்துறை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, புதிதாக பொறுப்பேற்றுள்ள வட்டாட்சியர் ஜெகதீசனுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies