Type Here to Get Search Results !

தருமபுரியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டு முடிவுகள் விளக்கப் பேரவை!


தருமபுரி – செப்டம்பர் 24:
 


தருமபுரி மாவட்ட இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டு தீர்மானங்கள் குறித்து விளக்கப் பேரவைக் கூட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மின்னலக அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஜி. மாதையன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர்கள் பி. இரவி, ஈ. அலமேலு, ஜி. ராஜகோபால், என்.பி. ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் மாநிலக்குழு உறுப்பினர் ஜி. பச்சாகவுண்டர் வரவேற்றார்.


கூட்டத்தில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் உ. கணேசன், மாநிலத் தலைவர் வீர பாலன், மாநிலப் பொருளாளரும் தருமபுரி மாவட்டச் செயலாளருமான ஜெ. பிரதாபன், மாநில துணைச் செயலாளர்கள் எஸ். சுந்தரம், கே.எம். காளியப்பன் ஆகியோர் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விளக்கிப் பேசினர். இதில் கட்சியைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் வெ.பை. மாதையன் நன்றியுரையாற்றினார்.


பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து, விவசாயிகளின் சாகுபடிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், மாவட்டத்தில் நடைபெறும் கனிமவளக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அரசின் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என வலியுறுத்தி, மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் குறித்து கூட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies