Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் 27,375 தொழிலாளர்களுக்கு ரூ.3424.86 இலட்சம் நலத்திட்ட உதவிகள்! – ஆட்சியர் தகவல்.


தருமபுரி:
 


தருமபுரி மாவட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் 27,375 தொழிலாளர்களுக்கு ரூ.3424.86 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.


தருமபுரி மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தின் மூலம், தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.


அதன்படி, 20,922 தொழிலாளர்களுக்கு ரூ.621.44 இலட்சம் கல்வி உதவித்தொகையாகவும், 2,513 தொழிலாளர்களுக்கு ரூ.493.04 இலட்சம் திருமண உதவித்தொகையாகவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இயற்கை மரணம் மற்றும் விபத்து மரண உதவித்தொகையாக 242 தொழிலாளர்களுக்கு ரூ.369.17 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.


60 வயது பூர்த்தியடைந்த 3,698 தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியம் மற்றும் மாதாந்திர ஓய்வூதியதாரர்களுக்கான உதவித்தொகையாக ரூ.1,941.21 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேற்குறிப்பிட்ட நலத்திட்டங்களின் கீழ் மொத்தம் 27,375 தொழிலாளர்களுக்கு ரூ.3424.86 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 


மேலும், நலவாரியங்களில் புதிதாக 12,763 தொழிலாளர்களுக்கு பதிவு அட்டைகளும், 16,111 தொழிலாளர்களுக்கு புதுப்பித்தல் அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நலவாரியத்தின் மூலம் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies