Type Here to Get Search Results !

கைவினைஞர் பயிற்சித்திட்டம்: அகில இந்திய தொழிற்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!


தருமபுரி – செப்டம்பர் 24:
 


2027-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித்திட்டத்தின் கீழ் DGT-இல் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தனித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்புவோர், விண்ணப்பப் படிவம், முழு விவரங்கள் அடங்கிய விளக்கக் குறிப்பேடு (Prospectus) மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான வழிகாட்டுதல்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.


தேர்வுக் கட்டணமாக ரூ.200/- செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை www.karuvoolam.tn.gov.in இணையதளத்தின் மூலம் e-Challan வழியாக செலுத்தி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் (Nodal Govt. ITI) முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முதனிலைத் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு (Theory) 26.11.2026 அன்று கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டும் செய்முறைத் தேர்வு 27.11.2026 அன்று நடைபெறும்.


தனித்தேர்வராக தேர்வு எழுதுவதற்கு 21.09.2026 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 09.10.2026 ஆகும். கடைசி தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தொடர்பான முழுமையான வழிகாட்டுதல்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


மேலும் விவரங்களுக்கு தருமபுரி மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை நேரிலோ அல்லது 04342-288099, 9080276172 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies