தருமபுரி, ஆகஸ்ட் 6:
சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் ஆணையரின் அறிவுரையின்படி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 249 கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, 2026 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கிராம சபைக் கூட்டங்கள் காலை 11.00 மணிக்கு அந்தந்த ஊராட்சிகளில் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கூட்டங்களை சிறப்பாக நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தனி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (கிராம ஊராட்சி) மற்றும் ஊராட்சி செயலாளர்கள் மேற்கொள்ள உள்ளனர். மேலும், கிராம சபைக் கூட்டங்களை சீராக நடத்துவதற்காக ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் ஒரு பற்றாளர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் உதவி இயக்குநர் மற்றும் இணை இயக்குநர் நிலை அலுவலர்கள் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டு, கூட்டங்களின் நடைபெறுதலை கண்காணிக்க உள்ளனர்.
இந்த கிராம சபைக் கூட்டங்களில் அனைத்து அரசுத் துறை அலுவலர்கள், ஊராட்சிக்குட்பட்ட வாக்காளர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் தவறாமல் கலந்து கொண்டு தங்களது கருத்துகள் மற்றும் கோரிக்கைகளை பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் வே. சரவணன், இ.ஆ.ப. கேட்டுக் கொண்டுள்ளார்.
.gif)

.jpg)