Type Here to Get Search Results !

தருமபுரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 683 மனுக்கள் பெறப்பட்டன – தகுதியான மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண மாவட்ட ஆட்சியர் உத்தரவு.


தருமபுரி, ஜூலை 6:


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 683 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட அனைத்து மனுக்களுக்கும் விரைந்து நடவடிக்கை எடுத்து தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வுகளை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வே. சரவணன், இ.ஆ.ப., சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் வே. சரவணன் தலைமையில் இன்று (06.07.2026) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து சாலை, குடிநீர், பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வீட்டுமனை பட்டா, சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 683 மனுக்கள் பெறப்பட்டன.


பெறப்பட்ட அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து ஆய்வு செய்து, தகுதியான மனுக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும், தருமபுரி மாவட்டத்தை வளர்ச்சிப் பாதையில் முன்னேற்ற அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், வருவாய்த் துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், வன்கொடுமையால் உயிரிழந்த அருண்பிரசாத் என்பவரின் மகன் ரித்திக் என்பவருக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணிநியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.


மாணவர்கள் மற்றும் இரத்த தானதாரர்களுக்கு பாராட்டு

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். மேலும், தன்னார்வமாக இரத்த தானம் வழங்கிய 32 இரத்த தானதாரர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். கவிதா, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) சந்திரசேகரன், தனித்துணை ஆட்சியர் (சபாதி) மு. செல்வி உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies