தருமபுரி, ஏப்ரல். 29:
தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தும், உறவினர்கள் யாரும் இல்லாமல் உயிரிழந்த மூன்று முதியவர்களின் உடல்களுக்கு மை தருமபுரி அமைப்பினர் மனிதநேய அடிப்படையில் நல்லடக்கம் செய்தனர். இந்த மூன்று முதியவர்களின் விவரங்களை தருமபுரி நகர காவல் நிலையம் மூலம் விசாரித்தபோதும், உறவினர்கள் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், பச்சியம்மன் கோவில் மயானத்தில் அவர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன.
இந்நிகழ்வில் தருமபுரி நகர காவல் நிலைய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பழனிச்சாமி, மை தருமபுரி அமைப்பின் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமைப்பாளர்கள் செந்தில், சண்முகம், கணேஷ், மருத்துவர் ஸ்ரீகாந்த், கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். மை தருமபுரி அமைப்பின் “அமரர் சேவை” மூலம் இதுவரை 205-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைப்பினர் தெரிவித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)