Type Here to Get Search Results !

பாலக்கோடு பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தொடங்கி வைத்தார்.


தருமபுரி | பிப்ரவரி 09:


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. பாலக்கோடு பேரூராட்சியில் மொத்தம் 110 தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். விடியற்காலை முதல் பணியில் ஈடுபட்டு வரும் இவர்களுக்கு, காலை உணவு உரிய நேரத்தில் கிடைக்காமல் நீண்ட காலமாக கேள்விக்குறியாக இருந்து வந்தது.


தூய்மை பணியாளர்களின் இந்த நிலையை கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை – திருவள்ளூர் பகுதியில் தொடங்கிய ‘முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை’ விரிவாக்கம் செய்து, தூய்மை பணியாளர்களுக்கும் காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.


அதனைத் தொடர்ந்து, பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள 110 தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை, பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தொடங்கி வைத்து, பணியாளர்களுக்கு உணவுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், செயல் அலுவலர் இந்துமதி, துணைத் தலைவர் தாஹசீனா இதயத்துல்லா, கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies