Type Here to Get Search Results !

தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் அதிமுகவினர் வியாபாரிகளுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்.


தருமபுரி | பிப்ரவரி 09:


தருமபுரி புறநகர் பேருந்து நிலையம், கடந்த 5-ஆம் தேதி நகரிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோகத்தூர் பகுதிக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பழைய புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டதால், வணிகர்கள் மற்றும் அதிமுக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அதிமுக சார்பில் பழைய புறநகர் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.


இந்நிலையில், மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி, பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள் மீண்டும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. இதனை வரவேற்கும் வகையில், அதிமுக நகர செயலாளர் பூக்கடை ரவி ஏற்பாட்டில், கோவிந்தசாமி, அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல், மாநில மருத்துவர் அணி இணை செயலாளர் அசோகன் ஆகியோர் தலைமையில், தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் வியாபாரிகளுடன் அதிமுகவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.


இந்த நிகழ்வில், ஒன்றிய செயலாளர்கள் சிவபிரகாசம், செல்வம், மகாலிங்கம், மருத்துவர் சந்திரமோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies