தருமபுரி | பிப்ரவரி 09:
மை தருமபுரி அமைப்பு சார்பில், தருமபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு மனிதநேயமிக்க சேவைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்விக்கு முக்கியத்துவம் வழங்கும் நோக்கில், ‘எண்ணங்களின் சங்கமம்’ மகாத்மா காந்தி மாலை நேர டியூசன் வகுப்புகளுக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகை வழங்கி வருவதுடன், மலைவாழ் கிராம குழந்தைகளுக்கு மேலங்கி மற்றும் கல்வி உபகரணங்களையும் வழங்கி வருகின்றனர்.
மேலும், மை தருமபுரி அமைப்பு சார்பில் 10 மாணவர்கள் பல்தொழில் நுட்பக் கல்லூரி மற்றும் கலைக்கல்லூரிகளில் கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் உருவாக்கி தரப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, இளங்கலை இயற்பியல் இறுதி ஆண்டு பயிலும் மூன்று மாணவர்களுக்கு கல்லூரி பருவக் கட்டணத்தை, அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமைப்பாளர் கிருஷ்ணன், தன்னார்வலர் கணேஷ் ஆகியோர் வழங்கினர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)