Type Here to Get Search Results !

பாலக்கோடு மந்தைவெளியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி திறந்து வைத்தார்.


பாலக்கோடு | பிப்ரவரி 17


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மந்தைவெளியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொருளாளர் எம்.எம். முருகன், மத்திய ஒன்றிய செயலாளர் பி.எல். ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரை இலவசமாக வழங்குவதோடு, 20 லிட்டர் தண்ணீரை ரூ.5க்கு வழங்கும் நோக்கில், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து, இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைக்கப்பட்டது.


இந்த திட்டத்தின் மூலம்:

  • சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவச விநியோகம்

  • குறைந்த கட்டணத்தில் 20 லிட்டர் தண்ணீர் வழங்கல்

  • கோடை காலத்திற்கான நீர் தேவையை பூர்த்தி செய்தல்

என பொதுமக்களுக்கு பலன்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் தாஹசீனா இதாயத்துல்லா, வார்டு கவுன்சிலர்கள் தீபா சரவணன், லட்சுமிராஜசேகர், குருமணிநாதன், ரூஹித், அயிஷாமசியுல்லா, பத்தேகான், கிளை செயலாளர்கள் சரவணன், ராஜீ, வடிவேல், மோகன் மற்றும் நிர்வாகிகள் சக்திவேல், அண்ணாமலை, தேவன், மாரியப்பன், அங்கப்பன், ரகு, சிவா, பூங்காவனம், படவட்டை, மாதேஷ், நூருல்லா உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies