தருமபுரி | பிப்ரவரி 17:
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து பெண்களுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (17.02.2026) நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கினார்.
Tata Electronics, ஒசூர் நிறுவனம் முகாமில் கலந்து கொண்டு, பல்வேறு கல்வித்தகுதிகளை சேர்ந்த 459 பெண் வேலைநாடுநர்களில் இருந்து 381 பேரை தேர்வு செய்தது. தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு மாவட்ட ஆட்சியர் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு:
-
மாதச்சம்பளம்: ரூ.13,500 முதல் ரூ.16,000 வரை
-
உணவு, தங்கும் விடுதி மற்றும் போக்குவரத்து வசதி – இலவசம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்பு முகாம்களை ஏற்பாடு செய்து வருகிறது.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம்:
-
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள்
-
போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்
-
கல்வித்தகுதிக்கு ஏற்ற உதவித்தொகை திட்டங்கள்
வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி ம.தீபா, காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் பு.ரா. பாலாஜி, மாவட்ட திறன் பயிற்சி அலுவலர் உ.முரளிதரன் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)