Type Here to Get Search Results !

அதியமான் கோட்டை ஸ்ரீ காலபைரவர் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி காணொளி மூலம் தமிழக முதல்வர் திறப்பு.


தருமபுரி, பிப்.28:
 


தருமபுரி மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை சார்பில் அதியமான் கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ காலபைரவர் திருக்கோவிலின் பக்தர்கள் தங்கும் விடுதியை தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி தொகுதி நாடாளுமன்ற ஆ.மணி எம்.பி. தலைமை வகித்தார்.


நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை மாவட்ட தலைவர் மே.அன்பழகன், திமுகவின் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் பெரியண்ணன், தருமபுரி மேற்கு நகர செயலாளர் கௌதம், பொதுக்குழு உறுப்பினர் சரஸ்வதி துரைசாமி, அறநிலைத்துறை அதிகாரிகள், கோவில் தர்மகர்த்தா காளியப்பன், பெருமாள், விஜயா, உண்ணமலை, மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மேலும் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் வெங்கடேசன், ரங்கநாதன், ஒன்றிய பிரதிநிதிகள் மோகன், மகேஷ்குமார், சின்னப்பெருமாள், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் எல்.டி.பழனிசாமி, ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் தமிழ்நீதி, நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், மஞ்சுநாதன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். புதிய தங்கும் விடுதி மூலம் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் சௌகரியமாக தங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies