Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் 100 நாள் வேலைத் திட்டத்தை முடக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.


பாலக்கோடு, டிச. 25:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் (MGNREGS) பாதிக்கப்படுவதாகக் கூறி, ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி அரசையும், அதற்கு ஒத்து ஊதும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியையும் கண்டித்து, திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் திமுக மாவட்ட பொருளாளர் எம்.எம். முருகன் தலைமையில் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ராஜகுமாரி, ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், முனியப்பன், ஆனந்தன், பேரூர் கழக செயலாளர் வெங்கடேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


போராட்டத்தில் பேசியவர்கள், மகாத்மா காந்தி பெயரை நீக்கி, வேறு பெயரில் புதிய திட்டத்தை கொண்டு வர ஒன்றிய அரசு மசோதா நிறைவேற்றியுள்ளதாக குற்றம்சாட்டினர். புதிய திட்டத்தின் கீழ், கிராமப்புற மக்களுக்கு வேலை மற்றும் கூலி உறுதி இல்லை, மாநில அரசுகளுக்கு நிதி சுமை அதிகரிக்கும், ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் பணிகளை மட்டுமே செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும், மேலும் வருடத்திற்கு 60 நாட்கள் வேலை இல்லா தடைக்காலம் விதிக்கப்படும் உள்ளிட்ட அபாயங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டினர்.


இதனை கண்டித்து, 100 நாள் வேலைத் திட்டத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி, ஒன்றிய அரசுக்கும் அதிமுகவுக்கும் எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் சந்திரசேகர், திராவிடர் கழகம் மாவட்ட துணை தலைவர் இளைய மாதன், இந்திய தேசிய காங்கிரஸ் வட்டார தலைவர்கள் ராஜேந்திரன், சிலம்பரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலாளர் நாகராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கழகச் செயலாளர் மாதப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி பொறுப்பாளர் விஜயகுமார், மாநில நிர்வாகி ராஜகோபால், மாவட்ட மகளிர் அணி மகேஸ்வரி, தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட தலைவர் சேட்டு, பேரூராட்சி கவுன்சிலர் கார்த்திகேயன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பாம்பே சக்திவேல், மாவட்ட மாணவர் அணி சந்தர், மாவட்ட மீனவர் அணி அருள் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இந்த போராட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிவில் பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி நன்றியுரை ஆற்றினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies