தருமபுரி – டிசம்பர் 25
தருமபுரியில், 100 நாள் வேலைத் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்ற முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தருமபுரி மேற்கு மாவட்ட அவைத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். இதில் மத்திய அரசு, மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி புதிய திட்டத்தை கொண்டு வர முயற்சிப்பதாகவும், இதன் மூலம் கிராமப்புற ஏழை மக்கள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் தீர்த்தராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சிசுபாலன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மைய மாவட்ட செயலாளர் த.கு. பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். மேலும் தருமபுரி நகர செயலாளர்கள் நாட்டான் மாது, கௌதம், தருமபுரி மேற்கு ஒன்றிய செயலாளர் டி. எல். காவேரி, தலைமை கழக பேச்சாளர் டி.ஏ. ரவி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக் குமார் கோவிந்தன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் உதயசூரியன், வெல்டிங் ராஜா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு, கைகளில் பதாதைகளை ஏந்தியவாறு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவது வரலாற்றுக்கும், சமூகநீதிக்கும் எதிரானது என்றும், இந்த முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.

.jpg)