சில நாட்களுக்கு முன்பு, கிறிஸ்டோபர், குமார், சக்திவேல் உட்பட 10 பேருக்கும் மேற்பட்டவர்கள் JCB கொண்டு சண்முகத்தின் கொட்டகையை இடித்து தரைமட்டமாக்கி, அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் சேதப்படுத்தியுள்ளனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி பகுதிகளில் விவசாய நிலங்களை குறிவைத்து செயல்படும் கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் உடந்தையான அதிகாரிகளை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தை வட்ட செயலாளர் காரல் மார்க்ஸ் தலைமையில் நடத்தினர். இதில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் காவல்துறை மற்றும் வருவாய் துறையை கண்டித்தும், கார்ப்பரேட் நில அபகரிப்பை எதிர்த்தும் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சிசுபாலன், செயற்குழு உறுப்பினர்கள் முத்து, நாகராசன், சேகர், வக்கீல் கோவிந்தசாமி உள்ளிட்டோரும், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)