தருமபுரி, அக்டோபர் 29:
ஆர்ப்பாட்டத்தின் போது முக்கியமாக வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:
-
தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ₹10,000 ஆக உயர்த்தி, ஊராட்சி மூலம் வழங்க வேண்டும்.
-
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு, பனிக்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு காலமுறை ஊதியம் ₹15,000 வழங்க வேண்டும்.
-
1.6.2009 முதல் அமல்படுத்தப்பட்ட அரசாணை எண் 234-ன் படி மக்கள் நலப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தை நிரந்தர ஊதியமாக மாற்றி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
-
தூய்மை காவலர்களுக்கு குடும்ப நலநிதி பிடித்தம் செய்து, அவர்கள் மரணமடைந்தால் ₹5,00,000 வழங்கிட வேண்டும்.
இதனுடன் மொத்தம் 16 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இவ்வியக்கத்திற்கான சிறப்புரையை மாநில அமைப்பு செயலாளர் செல்வம் வழங்கினார். அவர் உரையாற்றும்போது, “கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படாவிட்டால், நவம்பர் 24 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் சென்னை ஊரக வளர்ச்சி துறை ஆணையர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்,” என எச்சரித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் லட்சுமணன், சிவலிங்கம், பிரகாஷ், குணசேகரன், முகிலன், சுரேஷ், மோகன் குமார், முத்து, மூர்த்தி, ராமதாஸ், ராஜசேகர், துரைவேல், கோவிந்தசாமி, கிருஷ்ணகுமார், கோவிந்தன் உள்ளிட்ட ஊரக வளர்ச்சித் துறை சங்கங்களின் அலுவலர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)