Type Here to Get Search Results !

ரயில் விபத்தில் உயிரிழந்த முதியவரின் உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமரர் சேவை அமைப்பினர்.


தருமபுரி, செப்டம்பர் 19, 2025 (புரட்டாசி 3)

தருமபுரி ரயில்வே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவாடி ரயில் நிலையம் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரயில் விபத்தில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். தகவல் கிடைத்ததும் ரயில்வே காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டனர்.

மரணம் அடைந்தவரின் அடையாளம் தொடர்பான எந்த தகவலும் கிடைக்காத நிலையில், ஆதரவின்றி உயிரிழந்த அவரின் உடலுக்கு மை தருமபுரி அமரர் சேவை அமைப்பு இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தது. இந்த செயல்பாட்டில் தருமபுரி காவல் நிலைய காவலர் ஸ்ரீநாத், மை தருமபுரி நிறுவனர்-தலைவர் சதீஸ்குமார் ராஜா, செயலாளர் முனைவர் தமிழ்செல்வன், அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அமைப்பாளர்கள் கிருஷ்ணன் மற்றும் சையது ஜாபர் ஆகியோர் பங்கேற்றனர்.


குறிப்பாக, மை தருமபுரி அமரர் சேவை அமைப்பினர் இதுவரை 167 உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies