நரிப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 64 லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டும் பணி தொடக்கம்.
அரூர், செப். 19 (புரட்டாசி 03) -
அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நரிப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில், நபார்டு திட்டத்தின் கீழ் ₹64 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது. இந்த பணியை சட்டமன்ற உறுப்பினர் வே. சம்பத்குமார் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். பள்ளி பாதுகாப்பை மேம்படுத்தவும், மாணவர்களுக்கு சிறந்த சூழலை உருவாக்கவும் இந்த சுற்றுச்சுவர் கட்டுமானம் முக்கிய பங்காற்றும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் முருகன், நரிப்பள்ளி விஜய், சிக்ளூர் இளையராஜா, சதாசிவம், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக