Type Here to Get Search Results !

பாப்பாரப்பட்டியில் தேவ. பேரின்பன் நினைவு ரத்ததான முகாம் நடைபெற்றது.


தருமபுரி – செப்டம்பர் 13 (ஆவணி 29) -

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டியில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாற்றிய அறிஞர் தேவ. பேரின்பன் அவர்களின் நினைவாக 12-ஆவது ரத்ததான முகாம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.


இம்முகாமிற்கு மாவட்ட துணைச் செயலாளர் மு. சிலம்பரசன் தலைமையிலும், மாநிலத் துணைச் செயலாளர் கே.ஆர். பாலாஜி துவக்கிவைக்கும் நிகழ்விலும் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பி. கோவிந்தசாமி, மார்க்சிய அறிஞர் தேவ. பேரின்பன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார். நிர்வாகிகள் ரஜினி, மணிகண்டன், சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


முகாமில் 25 பேர் ரத்ததானம் செய்தனர். ரத்த தானம் செய்தவர்களுக்கு மருத்துவ அலுவலர் வே. சக்திவேல் சான்றிதழ்களை வழங்கினார். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி அலுவலர் டாக்டர் கன்யா, இரத்த தான முகாமை நடத்தித் தந்த வாலிபர் சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.


மேலும், பேரூராட்சி மன்ற உறுப்பினர் வே. விசுவநாதன், விவசாயிகள் சங்க நிர்வாகி ஆர். சின்னசாமி, சிபிஎம் வட்டார செயலாளர் ஆர். சக்திவேல், மாவட்டத் தலைவர் குறளரசன், மாவட்ட பொருளாளர் அருள்குமார், சுகாதார ஆய்வாளர்கள் சந்திரசேகர், பிரசாந்த், செவிலியர்கள் வசந்தி, மாலதி மற்றும் பல தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies