Type Here to Get Search Results !

தருமபுரியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவை கூட்டம்.


தருமபுரி, செப்டம்பர் 14, 2025 (ஆவணி 29) -

தருமபுரி மாவட்ட இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவை கூட்டம் வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் சி. பாலன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம். குமார், சி. சக்திவேல் முன்னிலை வகித்தனர். பேரவைக் கூட்டத்தை கட்சியின் மாநில தலைவர் ப. கி. பட்டாபிராமன் அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றினார். மாநில செயலாளர் எம். சுந்தர்ராஜன் அவர்கள் தேசிய மற்றும் மாநில அரசியல் குறித்து விரிவாக பேசியார்.


கூட்டத்தினை வாழ்த்தி கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் எம். எஸ். ராமசாமிரெட்டி, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எஸ். சுந்தரம், பி. இரவி, விவசாயிகள் சங்க தலைவர் எஸ். மாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உரையாற்றினர்.


பின்னர் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை:

  • தருமபுரி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட நீர்பாசன திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

  • அல்லியாளம் – தூர் சட்டி, ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட திட்டங்களை போர்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.

  • காவிரியில் உபரி நீர் கடலில் கலப்பதை தடுத்து, தருமபுரி ஏரிகளுக்கு மாற்றி, ஆண்டு முழுவதும் வேளாண்மைக்கு பயன்படச் செய்ய வேண்டும்.

  • மாவட்ட சாலைகள், நெடுஞ்சாலைகள் உடனடியாக புதுப்பிக்கப்பட்டு புதிய தார்சாலைகளாக்கப்பட வேண்டும்.

  • ஒன்றிய பாஜகவின் வாக்கு திருட்டு கொள்கைகளை கண்டித்து, தமிழ்நாடு அரசு உடனடியாக உதய மின் திட்டத்தில் இருந்து விலக வேண்டும். மின் கட்டண உயர்வை தடுக்க வேண்டும்.

  • இம்மாத இறுதியில் ஒன்றிய அரசு அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.


மேலும், கட்சியின் புதிய மாவட்டக்குழு மற்றும் நிர்வாகக்குழு தேர்வு நடைபெற்றது. இதில் 37 பேர் மாவட்டக்குழுவிலும், 13 பேர் நிர்வாகக்குழுவிலும் தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய பொறுப்புகள்:

  • மாவட்ட செயலாளர்: ஜெ. பிரதாபன்

  • துணைச் செயலாளர்கள்: சி. பாலன்

  • பொருளாளர்: ஜி. மாதையன், எ. அலமேலு

இறுதியில் ஜி. ராஜகோபால் நன்றி உரையாற்றினார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies