தருமபுரி – செப்டம்பர் 14, 2025 / ஆவணி 29-
தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்த பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் “நீங்கள் நலமா” திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (14.9.25) சோலைக்கொட்டாய் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மருத்துவ சேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
முதல்வரின் முகவரி துறை வழியாக மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் இந்தத் திட்டம், மக்களின் நலன், அவர்களின் கருத்துகள் மற்றும் குறைகளை நேரடியாக அறிந்து அரசின் சேவைகளை மேம்படுத்தும் நோக்கத்தோடு செயல்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, சோலைக்கொட்டாய் சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற செட்டிக்கரை சேர்ந்த திருமதி அபினைய அவர்களிடம் வழங்கப்பட்ட மருத்துவச் சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தனிப்பட்ட முறையில் பேசினார்.
பின்னர், மணியம்பாடி ஊராட்சி ஆலமரத்துப்பட்டி கிராமத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஏரியின் கரையோரம் இருபுறமும் 2,000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் தன்னார்வலர்கள் திரு. சங்கரட்டி, திரு. கமலநாதன், தமிழரசு, மகாலிங்கம் உள்ளிட்ட ஊர் மக்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)