Hollywood Movies

Breaking News

வரும் 20ம் தேதி வே.முத்தம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்.


தருமபுரி, செப்டம்பர் 20, 2025 (புரட்டாசி 4)

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் வரும் 20ம் தேதி வே.முத்தம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் 17 பிரிவுகளில் சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை வழங்க உள்ளனர். முகாமில் இசிஜி, எக்கோ, இருதய மருத்துவம், நுரையீரல் பரிசோதனை, ஆய்வக பரிசோதனைகள், கண் மருத்துவம், காது-மூக்கு-தொண்டை, எலும்பு, பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கான சிறப்பு மருத்துவம், நரம்பியல், பொது மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம் உள்ளிட்ட பல பிரிவுகளில் சேவைகள் வழங்கப்படுகின்றன.


மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகள், தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டைகள் மற்றும் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்குவதற்கும் முகாமில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இம்முகாமின் மூலம் பயன்பெறுமாறு பாப்பிரெட்டிப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் க.நே.கௌரிசங்கர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். 

கருத்துகள் இல்லை

Copying is disabled on this page!