பென்னாகரம் முள்வாடி துணை சுகாதார நிலையம் செல்லும் சாலை சேறும் சகதியாக உள்ளதால் பொதுமக்கள் அவதி.
தருமபுரி, செப்டம்பர் 18, 2025 (புரட்டாசி 2)
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே முள்வாடி பகுதியில் உள்ள துணை சுகாதார நிலையம் செல்லும் சாலை சேறும் சகதியாக காணப்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமம் அனுபவித்து வருகின்றனர். இந்த சாலை தினமும் நூற்றுக்கணக்கான கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிசுக்களுக்கு தடுப்பூசி செலுத்திச் செல்லும் முக்கிய பாதையாக உள்ளது. ஆனால், இன்று மாலை பெய்த சிறு மழைக்கே கூட சாலை சேறும் சகதியாக மாறி, இருசக்கர வாகனங்கள் வழுக்கி விழும் நிலையும், நடந்து செல்லும் பொதுமக்கள் கூட விழுந்து காயமடையும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
சிறு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் இப்பாதையில் நடந்து செல்லும்போது அல்லது வாகனத்தில் பயணம் செய்யும்போது வழுக்கி விழுவதால் அவர்களுக்கு அடிபட்டுக் காயங்கள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

.jpg)
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக