Hollywood Movies

Breaking News

தருமபுரி மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி – 2025 சிறப்பு விற்பனை தொடக்கம்.


தருமபுரி, செப்டம்பர் 18, 2025 (புரட்டாசி 2)

தீபாவளி – 2025 பண்டிகையை முன்னிட்டு தருமபுரி மற்றும் அரூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு மொத்தம் ரூ.130 இலட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தருமபுரி கோ-ஆப்டெக்ஸ் நெல்லிக்கனி விற்பனை நிலையத்தில் நடைபெற்ற சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

இந்தியாவின் மிகப்பெரிய கைத்தறி நிறுவனம் கோ-ஆப்டெக்ஸ், 1935 ஆம் ஆண்டிலிருந்து 90 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. விழாக்காலங்களில் கைத்தறி நெசவாளர்களின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு 30% வரை சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது. இம்மாண்டு தீபாவளிக்காக காஞ்சிபுரம், ஆரணி, சேலம், தஞ்சாவூர் பட்டு புடவைகள், மென்பட்டு புடவைகள், களம்காரி காட்டன் புடவைகள், படுக்கை விரிப்புகள், சட்டைகள், ஜமக்காளம் உள்ளிட்ட ஏராளமான புதிய வடிவமைப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.


மேலும், கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் (₹300 முதல் ₹3000 வரை) 11 மாத சந்தா செலுத்தினால் 12-வது மாத தொகையை நிறுவனம் வழங்கும் சிறப்பு பலனும் உள்ளது. அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவன ஊழியர்களுக்கு வட்டியில்லா கடன் வசதி வழங்கப்படுகிறது.


தருமபுரி கோ-ஆப்டெக்ஸ் நெல்லிக்கனி விற்பனை நிலையத்திற்கு ரூ.115 இலட்சமும், அரூர் விற்பனை நிலையத்திற்கு ரூ.15 இலட்சமும் என மொத்தம் ரூ.130 இலட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அனைவரும் கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டார்.


இந்நிகழ்வில் மாவட்ட அலுவலர்கள், கோ-ஆப்டெக்ஸ் மேலாளர்கள், கல்வி, மருத்துவம், விளையாட்டு மற்றும் பிற துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை

Copying is disabled on this page!