தருமபுரி, செப். 15 (ஆவணி 30) -
மனிதநேயச் செயல்களை தொடர்ந்து செய்து வரும் மை தருமபுரி அமைப்பின் சார்பில் புற்றுநோய் பாதித்த குழந்தைகள் மற்றும் மக்களுக்கு தட்டணுக்கள் தானம், இரத்த தானம் போன்ற பல்வேறு சேவைகள் மாநிலம் முழுவதும் வழங்கப்பட்டு வருகின்றன. புற்றுநோய் சிகிச்சையால் குழந்தைகளுக்கு அதிக அளவில் தலைமுடி உதிர்வு ஏற்படுவதால், அவர்களுக்கு இயற்கை தலைமுடி செய்ய கூந்தல் தானம் தேவையாகிறது. இதனை முன்னெடுத்து தருமபுரி மாவட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்ட பள்ளி தூய்மை மேற்பார்வையாளராக பணிபுரியும் திருமதி தீபா சம்பத் அவர்கள், புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக தனது தலைமுடியை தானமாக வழங்கினார். அவரது மனிதநேயச் செயலை பாராட்டி மை தருமபுரி அமைப்பின் சார்பில் நிறுவனத் தலைவர் முனைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் முனைவர் தமிழ்செல்வன், தன்னார்வலர் அம்பிகா ஆகியோர் மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தனர்.